சினம் தவிர்த்தல்

Neutralisation of Anger

சினம் தவிர்த்தல் பயிற்சி முறை

பொறுமையைக் கடைபிடித்து சினத்தைத் தவிர்க்கலாம்.

நமக்கு கெடுதல் செய்பவரையும் மன்னித்து வாழ்த்தலாம்.

15 நிமிடங்கள் துரியதவம் செய்ய வேண்டும். தவத்தை நிறைவு செய்து, தவநிலையில் மனதை வைத்து, மௌனமாக இருக்க வேண்டும்.

இந்நிலையில் சினம் தவிர்த்தல் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

சினம் ஏற்படும் நபர்களை வரிசையாக எழுதுக.

ஒவ்வொரு சினமாக ஆராய்க.

அவருக்கும் எனக்கும் தொடர்பு என்ன?

சினம் எழக்காரணம் என்ன?

சினம் வருவதற்கான காரணத்தில் எனது பொறுப்பு என்ன?

முன் அனுபவம் என்ன?

இவற்றிற்கு விடை ஆராய்ந்து இனி இவரிடம் சினம் கொள்ள மாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொள்க.

அவரை வாழ்த்துக.

Neutralisation of Anger